Home உலகம் உலகின் மோசமான காற்றுத் தரத்தைக் கொண்ட நகரங்களில் டொரொண்டோ

உலகின் மோசமான காற்றுத் தரத்தைக் கொண்ட நகரங்களில் டொரொண்டோ

0

உலகின் முக்கிய நகரங்களில் இரண்டாவது மிகவும் மாசுபட்ட நகரமாக கனடாவின் – டொராண்டோ தரப்படுத்தப்பட்டது.

சுவிஸ் காற்று தர கண்காணிப்பு நிறுவனமான IQAir குறித்த தரவரிசையை வெளியிட்டுள்ளது.

அந்தவகையில் டொராண்டோவின் காற்று தரம் தற்போது உலகளவில் மிக மோசமானவற்றில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

கனடாவில் பரவும் காட்டுத் தீ புகை

இதேவேளை கனடாவில் பரவும் காட்டுத் தீ புகை தெற்கு ஒன்டாரியோவின் பெரும் பகுதியை பாதிக்கும் என்றும் இது இன்று செவ்வாய்க்கிழமை வரை நீடிக்கும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

திங்கட்கிழமை காலை 6 மணியளவில், டொராண்டோ நகர மையத்தின் காற்று தர ஆரோக்கிய குறியீடு (AQHI) ஆறாக இருந்தது, இது மிதமான அபாயமாக கருதப்படுகிறது என்று ஏர் குவாலிட்டி ஒன்டாரியோ தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version