கார்த்தி
நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் மெய்யழகன்.
பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா, ஸ்வாதி என பலர் நடித்த இப்படம் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கிறது.
உறவுகளின் பாசத்தை உணர்த்தும் படமாக அமைந்த மெய்யழகன் பெரிய அளவு வசூலும் செய்தது.
கடந்த வருடம் இப்படம் வெளியானது, அதன்பின் கார்த்தி நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.
ஆல்யா மானசாவின் பாரிஜாதம் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபல நடிகர்… யார் தெரியுமா?
ஆனால் வா வாத்தியார், சர்தார் 2, கைதி 2, மார்ஷல், சுந்தர்.சி படம் என தொடர்ந்து படங்கள் கமிட்டாவதும், பிஸியாக படங்கள் நடிப்பதுமாக உள்ளார்.
மார்ஷல்
வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தமிழ் இயக்கத்தில் கார்த்தி மார்ஷல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க மலையாள சினிமா நடிகர் நிவின் பாலியிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாம்.
ஆனால் கடைசியில் அவர் கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியாமல் போ அவருக்கு பதில் பிரபல தமிழ் சினிமா நடிகர் ஆதி கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் நல்ல சாய்ஸ் தான் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.