Home சினிமா Top Cooku Doop Cooku சீசன் 2 எப்போது ஆரம்பம் தெரியுமா? வெங்கடேஷ் பட் கொடுத்த...

Top Cooku Doop Cooku சீசன் 2 எப்போது ஆரம்பம் தெரியுமா? வெங்கடேஷ் பட் கொடுத்த அப்டேட்

0

குக் வித் கோமாளி

விஜய் டிவியில் ரசிகர்கள் மிகவும் கொண்டாடும் ரியாலிட்டி ஷோ தான் குக் வித் கோமாளி. முதல் சீசன் படு வெற்றியடைய அடுத்தடுத்த சீசன்கள் மாஸாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கடந்த 5வது சீசனில் இருந்து புதிய நடுவர்கள், கோமாளிகள் மற்றும் புதிய தயாரிப்பு நிறுவனம் என புத்தம்புதிய சீசனாக ஒளிபரப்பாகி வந்தது.

தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான சிறந்த Biopic படங்கள்

தற்போது 6வது சீசன் கலகலப்பாக, ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. பிரியா ராமன், லட்சுமி ராமகிருஷ்ணன், மதுமிதா, ஷபானா ஆகியோர் சிறப்பான சமையலை கொடுத்து வருகிறார்கள்.

சன் டிவி

விஜய்யில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி வெற்றியடைய சன் டிவியில் டாப் குக்கூ டூப் குக்கூ என்ற சமையல் நிகழ்ச்சி கடந்த வருடம் ஒளிபரப்பாக தொடங்கியது. 

இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து 2வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்தனர். சமீபத்தில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட், சமூக வலைதளத்தில் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார்.

ஆகஸட் 17ம் தேதி டாப் குக்கூ டூப் குக்கூ நிகழ்ச்சி புரொமோ வெளியாகும் என பதிவு செய்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version