Home சினிமா 15 நாட்களில் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

15 நாட்களில் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

டூரிஸ்ட் பேமிலி

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்துள்ளார் நடிகர் சசிகுமார். இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் டூரிஸ்ட் பேமிலி.

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர். மேலும் இப்படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வந்த அனுபவிக்கும், வலி, வேதனை, போராட்டம் மற்றும் மகிழ்ச்சி என அனைத்தையும் இப்படத்தில் காட்டியிருந்தனர். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

வசூல்

இந்த நிலையில், 15 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் உலகளவில் 15 நாட்களில் ரூ. 60 கோடி வசூல் செய்துள்ளது. இது மாபெரும் வசூலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://cineulagam.com/article/tourist-family-15-days-box-office-collection-1747362772

NO COMMENTS

Exit mobile version