சுற்றுலாத்துறைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை கட்டம் கட்டமாக தளர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், டொயோட்டா லங்கா நிறுவனம் தனது முதலாவது வாகனத் தொகையை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்ததால், வாகனங்களை இறக்குமதி செய்வதற்குக் கட்டுப்பாடுகளை விதிக்கும் நடவடிக்கைகளை முன்னைய அரசாங்கம் மேற்கொண்டது.
‘
செலாவணி கையிருப்பு
எனினும், பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருவதாலும், அன்னியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பதாலும், இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி பல கட்டங்களாக வாகனங்களை மீண்டும் இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்தது.
இதனடிப்படையில், சுற்றுலாத்துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்ய முதல் அனுமதி வழங்கப்பட்டது.
அந்த முடிவின் பின்னர், டொயோட்டா லங்கா நிறுவனம் தனது முதல் வாகனத் தொகையை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.