தொடருந்து சாரதிகள் சங்கம் நாளை (29) முதல் அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தொடருந்து சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நாளை நள்ளிரவு தொடக்கம் நாடு தழுவிய ரீதியில் குறித்த 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவருகிறது.
அடையாள வேலைநிறுத்தத்திற்கான காரணம்
தவறான சமிக்ஞை அமைப்புகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி இந்த அடையாள வேலைநிறுத்தம் தொடங்கப்படும் என்று தொடருந்து சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த அடையாள வேலைநிறுத்தம் காரணமாக நாடு தழுவிய ரீதியில் அனைத்து தொடருந்து சேவைகளும் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

