Home இலங்கை சமூகம் எரிபொருள் விலை குறைப்பு : முச்சக்கர வண்டி ஓட்டுநர் சங்கத்தின் அறிவிப்பு

எரிபொருள் விலை குறைப்பு : முச்சக்கர வண்டி ஓட்டுநர் சங்கத்தின் அறிவிப்பு

0

எரிபொருள் விலை குறைந்தாலும் முச்சக்கர வண்டியின் போக்குவரத்து கட்டணங்களைக் குறைக்க முடியாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சங்கம் (AITWDU) தெரிவித்துள்ளது

போக்குவரத்து கட்டணங்கள் குறைப்பது தொடர்பில் மேற்கு மாகாண தேசிய போக்குவரத்து ஆணையம் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணையம்தான் (NTC) தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதனால் தங்களால் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியாது என முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

போக்குவரத்து ஆணையம் 

மேலும் தெரியவருகையில், மேற்கு மாகாண தேசிய போக்குவரத்து ஆணையம் அண்மையில், மேற்கு மாகாணத்தில் முச்சக்கர வண்டி போக்குவரத்து கட்டணங்களை ஒழுங்குபடுத்த முடிவு செய்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில், அவர்கள் முச்சக்கர வண்டி போக்குவரத்துக்கான புதிய நிலையான கட்டணங்களை நிர்ணயித்தனர்.

முச்சக்கர வண்டி

முன்னதாக, முதல் கிலோமீட்டருக்கு ரூபாய் 100 மற்றும் கூடுதல் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூபாய் 90 என கட்டணத்தை நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், இது நடைமுறைப்படுத்தவில்லை ஆகையால் தற்போது முச்சக்கர வண்டியின் போக்குவரத்து கட்டணங்களைக் குறைக்க தாங்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாது என ஓட்டுநர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அது மேற்கு மாகாண தேசிய போக்குவரத்து ஆணையத்தின் பொறுப்பாகும் எனவும் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version