மட்டக்களப்பு மாநகர சபை அமர்வில் யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கான கார்த்திகை 27ம் திகதி நினை வேந்தலையிட்டு அவர்களை நினைத்து இன்று வியாழக்கிழமை (20) இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
மட்டக்களப்பு மாநகர சபையின் 5 வது அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு சபா அமண்டபத்தில் மாநகர சபை முதல் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது.
மௌன அஞ்சலி
இதன்போது சபை ஆரம்பித்து உரையாற்றிய முதல்வர் யுத்ததினால் உயிரிழந்த படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் கார்த்திகை 27ம் திகதி நினைவேந்தலை முன்னிட்டு அவர்களின் ஆத்மசாந்தி வேண்டி சபையில் எல்லோரும் எழுந்து நின்று இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்திய நிலையில் உறுப்பினர் ஜெயாகுமார் அங்கு சுடர் ஒன்றை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
இதனை தொடர்ந்து மாநகரசபையில் செய்யப்பட்ட புனரமைப்பு மற்றும் வாகனம் திருத்தம், நிரந்தர ஊழியர் சம்பளம் போன்ற செலவு செய்த நிதிகள் தொடர்பாக சபை அனுமதிக்கு முன்வைக்கப்பட்டு சபை அனுமதி பெறப்பட்டது.
