திருகோணமலை மாநகர சபையின் முதல்வர் க. செல்வராஜா கிழக்கு
மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் கிழக்கு மாகாண
மாகாண பிரதம செயலாளர் டி.ஏ.சி.என்.தலங்கம ஆகியோரை நேரில் சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு நேற்றையதினம்(11.07.2025) நடைபெற்றுள்ளது.
இதன்போது, மாநகரத்தின் அபிவிருத்தி மற்றும் நிர்வாகம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்தது.
நினைவுச் சின்னம்
அத்துடன், சந்திப்பின் போது, நினைவுச் சின்னமொன்று வழங்கி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
