Courtesy: Kiyas Shafee
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, இலக்கந்தை பிரதேச கடற்றொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
சம்பூர், இலக்கந்தை மீனவ சங்கத் தலைவர் பொன்னம்பலம் ரவிச்சந்திரன் தலைமையில் இந்த கவனயீர்ப்பு
போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை(07.02.2025) நடைபெற்றது.
சட்டவிரோத வெடி மருந்தை(டைனமைட்) பாவித்து கடற்றொழிலில் ஈடுபடுவதை தடை செய்யக்கோரியே இந்தப்
போராட்டம் இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத வெடி மருந்து
இந்தப் பிரதேசத்தில் 145 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் 125 குடும்பங்கள் வீச்சு
வலை மூலம் கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் குடும்பங்களாகும்.
சட்டவிரோத வெடி மருந்தை சிலர் பாவித்து இந்த பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதால், ஏழை
கடற்றொழிலாளர்களின் தொழில் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சட்டவிரோத வெடி மருந்தை பாவித்து, கடற்றொழிலில் ஈடுபடுவதை அரசாங்கம் உடனடியாக தடை செய்ய
வேண்டும் என கோரிக்கை விடுத்து, இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.