திருகோணமலையில் (Trincomalee) சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல் நடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று முன் தினம் (06) இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை அலஸ்தோட்டம் பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில்
நடைபெற்ற விருந்தில் இந்த தாக்குல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காவல்துறையில் முறைப்பாடு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், விருந்தில் வைத்து உள்நாட்டவர் இருவர் வெளிநாட்டு பெண்ணொருவரிடம் தகாதமுறையில் நந்துகொள்ள முற்பட்டுள்ளனர்.

இதன்போது குறிக்கிட்ட கணவர் மீது குறித்த இருவரும் தாக்குதல் நடத்தியுள்ளனர்
இதையடுத்து, சம்பவம் தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் கைது
பின்பு, உப்புவெளி காவல்துறையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், சந்தேக நபர் இன்று (08) திருகோணமலை நீதவான்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் ஜூலை 21 வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபர் தற்போது காவல்துறையினரிடம் இருந்து
தலைமறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரைக் கைது செய்வதற்கான முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டு வருவதாக உப்புவெளி காவல்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/W93KPhvw4n8

