Home உலகம் அமெரிக்க வரலாற்றில் மோசமான ஜனாதிபதி : பைடனை கடுமையாக விமர்சித்துள்ள ட்ரம்ப்

அமெரிக்க வரலாற்றில் மோசமான ஜனாதிபதி : பைடனை கடுமையாக விமர்சித்துள்ள ட்ரம்ப்

0

அமெரிக்க(us) வரலாற்றில் மோசமான ஜனாதிபதி ஜோ பைடன்(joe biden) தலைமையிலான அரசு என பதவியேற்கப்போகும் டொனால்ட் ட்ரம்ப் (donald trump)கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அமெரிக்காவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்றார். அவர் எதிர்வரும் 20ம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், டொனால்ட் டிரம்ப் பதவியிலிருந்து வெளியேறும் ஜோ பைடன் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பைடன் நிர்வாகத்தில் மிகவும் மோசம்

பயங்கரவாதம் மற்றும் பிற வன்முறைக் குற்றங்களால் அமெரிக்காவில் மோசமான நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. நான் பலமுறை பேரணிகளின் போது கூறியிருந்தேன்.

தற்போது, பைடன் நிர்வாகத்தில் மிகவும் மோசமாகி உள்ளது. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு நிலைமை மோசமாகி விடும் என நான் கூறிய நேரம் தற்போது வந்துவிட்டது.

ஜோ பைடன் அமெரிக்காவின் வரலாற்றில் மிக மோசமான ஜனாதிபதி. அவரும் அவரது கட்சியினரும் நம் நாட்டிற்கு செய்ததை பேரழிவுகளை விரைவில் மறக்க முடியாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் அமெரிக்காவின் ஒர்லியன்ஸ் மாகாணத்தில் புதுவருட கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்மீது வாகனம் மோதியதில் பத்து பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version