Home உலகம் உலகே உற்று நோக்கும் ட்ரம்ப் – புடின் சந்திப்பு – உடன்பாடு இன்றி முடிவு

உலகே உற்று நோக்கும் ட்ரம்ப் – புடின் சந்திப்பு – உடன்பாடு இன்றி முடிவு

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையேயான சந்திப்பு உறுதியான உடன்பாடு எதுவும் இன்றி முடிவடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கு இடையிலான போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட  ட்ரம்ப் மற்றும் புடின் இடையிலான சந்திப்பு அலாஸ்காவின் ஆங்கரேஜில் உள்ள எல்ம்ஹர்ஸ்ட் – ரிச்சர்ட்சன் கூட்டு இராணுவ தளத்தில் இன்று (16) நடைபெற்றது. 

இரு தலைவர்களும் “பல புள்ளிகளில்” உடன்பாடு எட்டப்பட்டதாகத் தெரிவித்தாலும், உறுதியான ஒப்பந்தம் எதுவும் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தினர்.

உக்ரைன் பிரச்சினையில் முடிவு

இந்நிலையில் பேச்சுவார்த்தைகளை “ஆக்கபூர்வமானவை” என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வர்ணித்துள்ளார்.

அத்துடன், உக்ரைன் பிரச்சினையில் முடிவுக்கு வருவதற்கு இந்த உடன்பாடுகள் ஒரு “தொடக்கப் புள்ளியாக” இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவுடனான “வணிக ரீதியிலான மற்றும் நடைமுறை உறவுகளை” மீண்டும் ஏற்படுத்துவதற்கு இந்தப் பேச்சுவார்த்தைகள் உதவும் என்று ரஷ்ய ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா

https://www.youtube.com/embed/Bu32hhGSpfU

NO COMMENTS

Exit mobile version