Home அமெரிக்கா விரைவில் முடிவுக்கு வரும் ஈரான் போர்..!

விரைவில் முடிவுக்கு வரும் ஈரான் போர்..!

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட;ரம்ப், ஈரானில் நடைபெற்று வரும் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.

உலகளாவிய மற்றும் அமெரிக்காவின் எரிசக்தி விலைகள் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “இந்தப் போர் இன்னும் நீண்ட காலம் நீடிக்கும் என்று நான் நினைக்கவில்லை. இது விரைவில் முடிவுக்கு வரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முடிவுக்கு வரும்

இதற்கிடையில், முக்கிய கடல் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக வர்த்தகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்லும் வகையில், ஓமான் நாட்டின் மத்தியஸ்தத்துடன் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு தரப்புக்கும் ஏற்ற ஒப்பந்தம் எட்டப்படுவதற்கான சூழல் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளை, போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் தற்போது ஈடுபடவில்லை என்று ஈரான் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது.

Source: https://tamilwin.com/article/trump-says-he-thinks-iran-war-to-end-pretty-soon-1786051631

NO COMMENTS

Exit mobile version