Home அமெரிக்கா ஈரானின் அச்சுறுத்தல்: துருக்கியில் இருந்து ரகசிய விமானத்தில் ட்ரம்ப் பயணம்..

ஈரானின் அச்சுறுத்தல்: துருக்கியில் இருந்து ரகசிய விமானத்தில் ட்ரம்ப் பயணம்..

0

 ஈரானிடமிருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் துருக்கியில் இருந்து ரகசியமாக வேறு விமானத்தில் பயணித்ததாக வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ட்ரம்ப் கட்டாரால் வழங்கப்பட்ட புதிய விமானத்தில் துருக்கியின் அங்காராவுக்குச் சென்றிருந்தார்.

ஈரான் அச்சுறுத்தல் 

எனினும், அங்கிருந்து புறப்படும் போது எதிர்பாராத விதமாக பழைய Air Force One விமானத்தை பயன்படுத்தியிருந்தார்.

அங்காரா விமான நிலையத்தில் ஊடகங்கள் முன்னிலையில் பழைய Air Force One விமானத்தில் ஏறிய ட்ரம்ப், பின்னர் விமான நிலைய உணவு விநியோக வாகனம் மூலம் ரகசியமாக மற்றொரு சிறிய விமானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விமானம் அமெரிக்க விமானப்படையின் C-32A விமானம் எனவும், அதில் ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு பயணித்ததாகவும் வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

ஈரானுடனான பதற்றம் அதிகரித்திருந்த காலகட்டத்தில் இந்தப் பயணம் இடம்பெற்றதுடன், ஈரான் துருக்கியின் அண்டை நாடாகவும் உள்ளது.

உயர்மட்ட பாதுகாப்பு

இதனிடையே, கட்டார் வழங்கிய புதிய விமானம் ஜனாதிபதி மற்றும் அவரது பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் உயர்மட்ட பாதுகாப்பு நடைமுறைகளுடன் பொருத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக பல எதிரிகள் அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், அந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தங்களிடம் உள்ள அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்துவதாக வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஸ்டீவ் சியுங் தெரிவித்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/trump-secretly-fled-turkey-amid-iran-threat-1786467290

NO COMMENTS

Exit mobile version