Home உலகம் ட்ரம்ப்பின் வரி விதிப்பு: கனடாவில் உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான எச்சரிக்கை

ட்ரம்ப்பின் வரி விதிப்பு: கனடாவில் உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான எச்சரிக்கை

0

கனடாவில் (Canada) டின்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டின்களில் அடைக்கப்பட்ட ஒர் உணவுப் பொருளின் விலை 40 சதங்களினால் உயர்வடையும் என ஒன்டாரியோவில் இயங்கும் முக்கிய உணவுப் பொருள் பதப்படுத்தும் நிறுவனங்களில் ஒன்றான சன் பிரைட் புட்ஸ் இன்ங் நிறுவனம் எச்சரித்துள்ளது.

இது உலகளவில் உள்ள மிகப்பெரிய தக்காளி பதப்படுத்தும் நிறுவனங்களில் ஒன்றாகும்.

இந்த தக்காளிகளை சந்தைக்கு அனுப்புவதற்கு, பெரும்பாலான டின் மூடிகள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜான் யாக்கொபெல்லி கூறியுள்ளார்.

ட்ரம்ப்பின் வரி

இந்நிலையில், உருக்கு மற்றும் அலுமினிய பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி விதித்த சுங்க வரி காரணமாக இவ்வாறு பொருட்களின் விலைகள் உயர்வடையும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், அமெரிக்காவிலிருந்து டின்களை உற்பத்தி செய்ய மூலப்பொருள் கொள்வனவு செய்யும் போது வரி காரணமாக கூடுதலான தொகை செலுத்த நேரிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version