கடந்த(13)ஆம் திகதி வெருகல் பிரதேச செயலகத்துக்கு முன் நிவாரணம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் (22.12.2025)மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துமீறி உள்நுழைந்தமை, கடமையை செய்ய விடாது தடுத்தமை போன்ற குற்றச்சாட்டின்
கீழ் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பிணை
குறித்த கைது செய்யப்பட்ட நபர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி நகர்த்தல் பத்திரத்தை முன்வைத்து நீதவான்
முன்னிலையில் தனது வாத பிரதிவாதத்தை முன்வைத்தார்.
இதன் போது இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
