Home இலங்கை குற்றம் மன்னாரில் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சகோதரர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை

மன்னாரில் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சகோதரர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை

0

மன்னாரில் 16 வயதுக்கு குறைந்த பெண் பிள்ளையை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு )
7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி
தீர்ப்பளித்துள்ளார். 

குற்றத்தின் பாரதூர தன்மை, பாதிக்கப்பட சிறுமியின் நிலை, மேலும் இவ்வாறான
குற்றங்கள் இடம்பெறாமல் இருக்க வேண்டும் என்ற தன் அடிப்படையில் சட்ட
ஏற்பாடுகளுக்கு அமைவாக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

7 வருட கடூழிய சிறைத்தண்டனை

7 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக தண்டப்பணமும், பாதிக்கப்பட்ட
சிறுமிக்கு 5 இலட்சம் ரூபாய் நட்ட ஈட்டு தொகையும் வழங்க தீர்ப்பளிக்கப்பட்டது.

இருவரில், குறித்த சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்த சகோதரருக்கு உதவி புரிந்தமைக்காக மற்றைய நபருக்கு அதே தண்டனை அதாவது 7 ஆண்டு கடூழிய
சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வழக்கு தொடுனர் தரப்பில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன்
மற்றும் சிவஸ்கந்தஶ்ரீ ஆகியோர் வழக்கை நெறிப்படுத்தி இருந்தனர்.

மேலும், வழக்கு தொடுனர் தரப்பில் வழக்கு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால்
நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிகளுக்கு கடூழிய சிறைத்தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version