Home உலகம் வெளிநாடொன்றில் மடிக்கணினி வெடித்து சிதறியதால் உயிரிழந்த சிறுவர்கள்: பலர் படுகாயம்

வெளிநாடொன்றில் மடிக்கணினி வெடித்து சிதறியதால் உயிரிழந்த சிறுவர்கள்: பலர் படுகாயம்

0

பாகிஸ்தானில் (Pakistan) வீடு ஒன்றில் மடிக்கணினி வெடித்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மின்னேற்றம் செய்வதற்காக பொருத்தப்பட்டிருந்த மடிக்கணினி வெடித்ததால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்போது, இரண்டு பெண்கள் மற்றும் மூன்று முதல் ஒன்பது வயதுடைய ஐந்து குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் தீக்காயங்களுடன் மீட்பு சேவைகளால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

காரணம்

இந்த நிலையில், விபத்தில் படுகாயமடைந்த 6 வயது சிறுமியும் 9 வயது சிறுவனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, மடிக்கணினிகள் மற்றும் தொலைபேசிகளில் உள்ள தவறான லித்தியம் அயன் மின்கலன்கள் அதிக வெப்பமடைந்து தீப்பிடிப்பதால் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகின்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source: https://ibctamil.com/article/two-children-died-in-a-laptop-explosion-1718886887

NO COMMENTS

Exit mobile version