Home இலங்கை சமூகம் யாழில் வாகன விபத்தில் சிக்கி பாடசாலை மாணவன் உட்பட இருவர் காயம்

யாழில் வாகன விபத்தில் சிக்கி பாடசாலை மாணவன் உட்பட இருவர் காயம்

0

யாழ்ப்பாணம் (Jaffna)- வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, விபத்தில் சிக்கி பாடசாலை மாணவன் உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பாடசாலை நிறைவடைந்து உறவினரின் மகனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றவேளை வீதியில் சென்றுகொண்டிருந்த துவிச்சக்கர
வண்டி மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி

விபத்தில் பாடசாலை மாணவன் மற்றும் அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற இருவரும் காயமடைந்துள்ளனர்.

இந்தநிலையில், காயமைடைந்தவர்களை மீட்டு உடனடியாக
மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக
சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://ibctamil.com/article/two-injured-in-jaffna-cempiyanparru-accident-1720257557

NO COMMENTS

Exit mobile version