கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கொழும்பு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, கடுவெலவிலிருந்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான சந்தேக நபரை அழைத்து வந்த சாரதியான தொன் ஜனக உதய குமார என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு, மற்றைய சந்தேக நபர் அதுருகிரிய காவல்துறையைச் சேர்ந்த ஹசித ரோஷன் என்ற காவல்துறை உத்தியோகத்தர் என்பதும் தெரியவந்துள்ளது.
நீதிமன்ற உத்தரவு
குறித்த சந்தேகநபர்கள் இன்று (22) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர், மார்ச் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொலைச் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த அறிக்கையையும் காவல்துறையினர் நீதிமன்றில் சமர்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் இதுவரையில் காவல்துறையினர் ஐவரை கைது செய்துள்ளனர்.