Home இலங்கை சமூகம் கொழும்பில் 67 வது மாடியில் இருந்து குதித்து மாணவன் – மாணவி விபரீத முடிவு

கொழும்பில் 67 வது மாடியில் இருந்து குதித்து மாணவன் – மாணவி விபரீத முடிவு

0

கொழும்பிலுள்ள (colombo) பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனும் மாணவியும் மாடியில் இருந்து வீழ்ந்து உயிரை மாய்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறித்த சம்பவம் கொழும்பு – கொம்பனி வீதியிலுள்ள சொகுசு குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

கொழும்பு – குருந்துவத்தையில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவனும் மாணவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொழும்பு – கொம்பனி வீதியிலுள்ள சொகுசு குடியிருப்பு கட்டிடத்தின் 67வது மாடியில் இருந்து குதித்து தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்கள் வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மாணவர்கள் தங்கியிருந்த இல்லத்திலும் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version