யாழ்ப்பாணம் (Jaffna) – அரியாலைப் பகுதியில் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 156 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மன்னார் (Mannar) காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினால் மேற்படி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போதைப்பொருள் ஒழிப்புப்
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி (Kilinochchi) பகுதியைச் சேர்ந்த 39 மற்றும் 44 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 156 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன் பெறுமதி சுமார் 42 மில்லியன் ரூபா என காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.