யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட நாவற்குழி பகுதியில் பல்வேறுபட்ட
குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு இளைஞர்களை கெரோயின் போதைப்பொருளுடன்
பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ்
குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவல்களுக்கு அமைய. நாவற்குழி பகுதியை சேர்ந்த
21மற்றும் 23 வயதுடைய இரண்டு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை 3700, 3500 மில்லிக்கிரம் கெரோயின்
போதைப்பொருளுடன் கைது செய்ய முற்பட்ட வேளை பொலிஸாரை வாளினால்
வெட்ட முற்பட்டதாகவும் அதில் ஒரு சந்தேக நபர் 25இற்கு மேற்பட்ட வழக்குகளுடன்
தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
