முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரித்தானிய கடவுச்சீட்டு கட்டணங்களில் அதிரடி மாற்றம்

பிரித்தானியாவில் (United Kingdom) கடவுச்சீட்டு விண்ணப்பங்களுக்கான புதிய கட்டணங்கள் ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி நடைமுறைக்கு வரவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவுக்குள்ளிருந்து நிகழ்நிலையில் பதிவு செய்யப்படும் கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கான கட்டணம், பெரியவர்களுக்கு 88.50 பவுண்டுகளிலிருந்து 94.50 பவுண்டுகளாகவும், குழந்தைகளுக்கு 57.50 பவுண்டுகளிலிருந்து 61.50 பவுண்டுகளாகவும் உயரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பத்திற்கான கட்டணம், பெரியவர்களுக்கு 100 பவுண்டுகளிலிருந்து 107 பவுண்டுகளாகவும், குழந்தைகளுக்கு 69 பவுண்டுகளிலிருந்து 74 பவுண்டுகளாகவும் உயரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய கடவுச்சீட்டு 

பிரித்தானியாவுக்குள்ளிருந்து செய்யப்படும் பிரீமியம் சேவை விண்ணப்பத்திற்கான கட்டணம், பெரியவர்களுக்கு 207.50 பவுண்டுகளிலிருந்து 222 பவுண்டுகளாகவும், குழந்தைகளுக்கு 176.50 பவுண்டுகளிலிருந்து 189 பவுண்டுகளாகவும் உயரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய கடவுச்சீட்டு கட்டணங்களில் அதிரடி மாற்றம் | Uk Gov Announces Passport Fee Hike

வெளிநாட்டிலிருந்து பிரித்தானிய கடவுச்சீட்டு பெற நிகழ்நிலையில், விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பத்திற்கான கட்டணம், பெரியவர்களுக்கு 101 பவுண்டுகளிலிருந்து 108 பவுண்டுகளாகவும், குழந்தைகளுக்கு 65.50 பவுண்டுகளிலிருந்து 70 பவுண்டுகளாகவும் உயரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்திற்கான கட்டணம்

அத்தோடு, வெளிநாட்டிலிருந்து பிரித்தானிய கடவுச்சீட்டு பெற காகிதத்தில் விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பத்திற்கான கட்டணம், பெரியவர்களுக்கு 112.50 பவுண்டுகளிலிருந்து 120.50 பவுண்டுகளாகவும், குழந்தைகளுக்கு 77 பவுண்டுகளிலிருந்து 82.50 பவுண்டுகளாகவும் உயரவுள்ளது.

பிரித்தானிய கடவுச்சீட்டு கட்டணங்களில் அதிரடி மாற்றம் | Uk Gov Announces Passport Fee Hike

இதனப்படையில், தாங்கள் பயணம் செய்வதற்கு முன்னரே சரியான நேரத்தில் கடவுச்சீட்டு பெற விண்ணப்பிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.