Home இலங்கை பொருளாதாரம் இலங்கைக்கு கிடைத்துள்ள பிரித்தானியாவின் மகிழ்ச்சியான தகவல்

இலங்கைக்கு கிடைத்துள்ள பிரித்தானியாவின் மகிழ்ச்சியான தகவல்

0

இலங்கை உட்பட வளர்முக நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கான இறக்குமதியை இலகுபடுத்தும் வகையில் புதிய வர்த்தக நடவடிக்கைகள் தொகுப்பை பிரித்தானிய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆடைகள், உணவுப் பொருட்கள், மின்னணுவியல் சாதனங்கள் போன்றவை இந்தச் சலுகையின் கீழ் வரும் பொருட்களின் பட்டியலில் அடங்கும்.

இதன் மூலம், அந்த நாடுகள் பிரித்தானியாவுக்கு சுங்க வரியின்றி அதிகமான பொருட்களை ஏற்றுமதி செய்யலாம் என பிரித்தானிய வணிகம் மற்றும் வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது.


புதிய வர்த்தக நடவடிக்கை

இந்தத் திட்டம், வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, பிரித்தானியாவுன்னான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை உட்பட பல நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா இறக்குமதி வரியை அறிவித்துள்ள நிலையில். பிரித்தானியாவில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

  

NO COMMENTS

Exit mobile version