பெண்களுக்கு எதிரான பாகுபாடு ஒழிப்புக்கான ஐக்கிய நாடுகளின் குழு, அதன் அடுத்த
அமர்வில் இலங்கை உட்பட்ட சில நாடுகளின் நிலைமைகளை மதிப்பாய்வு செய்யவுள்ளது.
இதற்காக, ஐக்கிய நாடுகளின் குழு, 2025 பெப்ரவரி 3 முதல் 21 வரை தமது அமர்வை
நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான மாநாட்டில்
அங்கம் பெற்றுள்ள 189 நாடுகளில் இந்த எட்டு நாடுகளும் அடங்குகின்றன.
பெண்களுக்கான பாகுபாடு
இந்தநிலையில், குறித்த நாடுகளின் பெண்களுக்கான பாகுபாடு தொடர்பான நிலவரங்கள்,
23 சுயாதீன சர்வதேச நிபுணர்கள் குழுவால் பரிசீலனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.
குறித்த நாடுகளின் தேசிய மனித உரிமை நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள்
மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து அந்தந்த நாட்டு அறிக்கைகள் மற்றும்
சமர்ப்பிப்புக்களை கருத்திற்கொண்டே இந்த மதிப்பாய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
பொது விவாதம்
இதன்படி, இலங்கை தொடர்பான மதிப்பாய்வு 2025 பெப்ரவரி 13ஆம் திகதியன்று
மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனையடுத்து ஐக்கிய நாடுகளின் குழு மேலதிகமாக, பெப்ரவரி 17ஆம் திகதியன்று,
அரை நாள் பொது விவாதத்தை நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
