Home இலங்கை சமூகம் இலங்கை வரும் ஐ.நா மனித உரிமை உயர் ஸ்தானிகர் :அநுர அரசுக்கு நெருக்கடி..!

இலங்கை வரும் ஐ.நா மனித உரிமை உயர் ஸ்தானிகர் :அநுர அரசுக்கு நெருக்கடி..!

0

 கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகர் ஒருவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

 இவ்வாறு வருகை தரும் அவர் பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான அநுர அரசின் முயற்சிகள் குறித்து தீவிர கவனமெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  இதன்படி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில்இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு வருகை தந்த உயர்ஸ்தானிகர்

2016 ஆம் ஆண்டு, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது, ​​அப்போதைய மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகர் செயிட் அல் ஹுசைன், நாட்டிற்கு விஜயம் செய்தார்.

விசேட கவனம் செலுத்தப்படவுள்ள விடயங்கள்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகரின் இந்தப் பயணத்தின் போது, ​​இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து அதிக அவதானம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது

.

தனது விஜயத்தின் போது, ​​பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்தின் திருத்தம் உட்பட நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டம் குறித்து உயர்ஸ்தானிகர் விசேட கவனம் செலுத்தவுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version