Home இலங்கை சமூகம் மூவாயிரம் கோடி ரூபா மதிப்புள்ள பாதாள உலக சொத்துக்கள் அரசாங்கம் வசம்

மூவாயிரம் கோடி ரூபா மதிப்புள்ள பாதாள உலக சொத்துக்கள் அரசாங்கம் வசம்

0

2021 மற்றும் 2024 க்கு இடையில் அரசாங்கம் இதுவரை 3902 கோடி ரூபா மதிப்புள்ள பாதாள உலக குற்றவாளிகளின் சொத்துக்களைக் கைப்பற்றியுள்ளது.

குறித்த தகவலை காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல் கண்காணிப்பாளர் உதய குமார் வுட்லர் வெளியிட்டுள்ளார்.

கையகப்படுத்த நடவடிக்கை

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல், 730 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் செயலற்ற நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, அந்த சொத்துக்களையும் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

இந்நிலையில், முடக்கப்பட்ட சொத்துக்களில் 354 பவுண் தங்கம், 72 கார்கள், 35 சொகுசு வீடுகள், 37 ஏக்கர் நிலம் மற்றும் ரூ. 670 மில்லியன் ரொக்கம் ஆகியவை அடங்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version