Home இலங்கை சமூகம் “படித்தும் பரதேசிகளாக திரிவதா” யாழில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

“படித்தும் பரதேசிகளாக திரிவதா” யாழில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

0

வடமாகாணத்தில் உள்ள வேலையில்லாத பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது இன்று (16) யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, தேங்காய் உடைத்து குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வேலையில்லா பட்டதாரி

அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென இதன்போது வேலையில்லா பட்டதாரிகள் வலியுறுத்தியிருந்தனர்.

இந்தநிலையில்,  40 ற்கும் மேற்பட்ட வேலையில்லாத பட்டதாரிகள் ஒன்றியத்தின் உள்ளிட்ட மாணவர்கள் குறித்த போராட்டத்தில் பங்குபற்றியிருந்தனர். 

“பட்டம் வீட்டில் பட்டதாரிகள் நடு ரோட்டில், ஒரே ஒரு பரீட்சையில் பறந்து போனது பல பரீட்சை எழுதிப் பெற்ற பட்டம், வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், எமக்கான வாழ்க்கையை நாம் எப்போது வாழ்வது, படிப்பிற்கும் போராட்டம் வேலைக்கும் போராடுவதா, எல்லோருக்கும் பாரபட்சமின்றி வேலைகளை வழங்க வேண்டும், படித்ததற்கு கூலி தொழிலா கடைசி வரைக்கும், படித்தவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடுகளா, பல வருட கனவு வெறும் கனவாகவே போய்விடுமா, படித்தும் பரதேசிகளாக திரிவதா” என பல்வேறுப்பட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version