முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்ப்பாணம் பாடசாலை ஒன்றின் இல்ல அலங்கரிப்பு: தீவிர விசாரணையில் காவல்துறை

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியின்  இல்ல அலங்கரிப்பு தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யூனியன் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.

அதன் போது, கார்த்திகைப் பூ வடிவிலும், போர் டாங்கி வடிவிலும், இல்ல அலங்கரிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ரஞ்சித் பண்டார மீது பெண் ஒருவர் அளித்த முறைப்பாடு: ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணை

ரஞ்சித் பண்டார மீது பெண் ஒருவர் அளித்த முறைப்பாடு: ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணை

இல்ல அலங்கரிப்பு 

அவை தொடர்பிலான புகைப்படங்கள் நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தன.

யாழ்ப்பாணம் பாடசாலை ஒன்றின் இல்ல அலங்கரிப்பு: தீவிர விசாரணையில் காவல்துறை | Union College Jaffna Sportmeet Police Investigatio

அது தொடர்பில் நேற்றைய தினம் விளையாட்டு போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையே காவல்துறையினர் , இராணுவ புலனாய்வாளர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் பாடசாலைக்கு நேரில் சென்று இல்லங்களை பார்வையிட்டு, புகைப்படங்கள், காணொளிகள் என்பவற்றை எடுத்தனர்.

அத்துடன் இன்றைய தினம்(31) ஞாயிற்றுக்கிழமை காவல் நிலையத்திற்கு வருகை தருமாறு பாடசாலை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி இருந்தனர்.

சஜித்தை கழற்றிவிட்டு மீண்டும் மகிந்தவுடன் இணையும் முன்னாள் சகா

சஜித்தை கழற்றிவிட்டு மீண்டும் மகிந்தவுடன் இணையும் முன்னாள் சகா

காவல்துறையினரின் விசாரணை

இந்நிலையில் அதிபர் உள்ளிட்டவர்கள் காவல் நிலையம் சென்று இருந்த நிலையில், காவல்துறையினர் அவர்களிடம் வாக்கு மூலங்களை பெற்ற பின்னர் அவர்களை விடுவித்து இருந்தனர்.

யாழ்ப்பாணம் பாடசாலை ஒன்றின் இல்ல அலங்கரிப்பு: தீவிர விசாரணையில் காவல்துறை | Union College Jaffna Sportmeet Police Investigatio

இதேவேளை அண்மையில் கிளிநொச்சி மாவடத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், இடம்பெற்ற விளையாட்டு போட்டியில் இல்ல அலங்கரிப்பு மற்றும் விநோத உடை போட்டிகள் தொடர்பிலான படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சைகள் ஏற்பட்டதை அடுத்து, வடமாகாண கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு , இல்ல அலங்கரிப்பு மற்றும் விநோத உடை போட்டிகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம்!

யாழில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்