Home இலங்கை சமூகம் யாழ். பல்கலை மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு பெருகும் ஆதரவு

யாழ். பல்கலை மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு பெருகும் ஆதரவு

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக (University of Jaffna) மாணவர்கள் முன்னெடுத்துள்ள காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தற்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கமும்  தமது ஆதரவை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பல்கலைக்கழக மாணவர்களே நாளைய எமது சமுதாயத்தின் தூண்கள். பல்கலைக் கழகங்கள்
எமது சமுதாயத்தின் நீண்ட கால வளர்ச்சியினை நோக்காககக் கொண்டு செயற்பட
வேண்டும்.

முறையான போராட்டம்

இருப்பினும், அண்மைக் காலங்களில் சமூகத்திற்கு அர்ப்பணிப்பு
மிக்கவர்களாகவும், வினைத்திறன் உள்ளவர்களாகவும் மாணவர்களை வலுப்படுத்துவதில்
பல்கலைக் கழகங்கள் பின் தங்கிவிட்டதாக எமது சமுதாயத்தில் கருத்து நிலவி
வருகின்றது.

எமது பல்கலைக்கழகம் எப்பொழுதும் மாணவர்கள் நலன் சார்ந்தே தனது தீர்மானங்களை
எடுத்து வருகின்றது என்பது வரலாறு இனியும் அது தொடர வேண்டும் என்பது எமது
எதிர்பார்ப்பு.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து
24/01/2025 வெள்ளிக்கிழமை முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.

இவ்விடயத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் அசமந்தமாகச் செயற்படுவது
எமக்கு வேதனையை தருகின்றது.

எனவே, மாணவர்களின் சாத்வீக முறையான இப்போராட்டம் வெற்றி பெற அவர்களின்
கோரிக்கைகளை வெளிப்படைத்தன்மையுடன், உரிய சட்டதிட்டங்களுக்கமைய, நீதியாக,
காலந்தாழ்த்தாது விரைவில் தீர்த்துவைக்குமாறும் கேட்டுக்கொண்டு, பல்கலைக்கழக
ஊழியர் சங்கமாகிய நாமும் அவர்களுக்கு உறுதுணையாக நிற்போம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.youtube.com/embed/ifbkVURWTYI

NO COMMENTS

Exit mobile version