Home இலங்கை சமூகம் பேருந்தில் பல்கலை மாணவியிடம் இழிவாக நடந்துக் கொண்ட சந்தேநபர் கைது!

பேருந்தில் பல்கலை மாணவியிடம் இழிவாக நடந்துக் கொண்ட சந்தேநபர் கைது!

0

பயணிகள் பேருந்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவரை பின் இருக்கையில் அமர்ந்து துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கறுவாத்தோட்டம் காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

ஹொரணையில் இருந்து கொழும்புக்கு தனியார் பேருந்தில் பயணித்த 27 வயது பல்கலைக்கழக மாணவி ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

அதன்போது, பின்னால் அமர்ந்திருந்த சந்தேக நபர், பல சந்தர்ப்பங்களில் குறித்த மாணவியின் முதுகை தகாத முறையில் தொட்டு துன்புறுத்தியுள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

வழக்கு விசாரணை

பாதிக்கப்பட்ட மாணவி பேருந்தின் உள்ளே குரல் எழுப்பி என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தியபோது, ​​பயணிகளில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரி சந்தேக நபரைப் பிடித்து கறுவாத்தோட்டம் காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம, தலா 200,000 ரூபாய் வீதம் இரண்டு சரீரப் பிணைகளில் பிணை வழங்கினார்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பான வழக்கை டிசம்பர் 1 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version