Home இலங்கை சமூகம் தலதாவின் அனுமதியின்றி ஐ.தே.க. பிரமுகர்கள் ஊடக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கட்டுப்பாடு

தலதாவின் அனுமதியின்றி ஐ.தே.க. பிரமுகர்கள் ஊடக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கட்டுப்பாடு

0

தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் ஒலி/ஒளிபரப்பாகும் அரசியல் நிகழ்ச்சிகளில் கட்சியின் செயலாளர் தலதா அத்துகோரளவின் அனுமதியின்றி ஐ.தே.க.வினர் கலந்து கொள்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கடிதமொன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள சகல ஊடக நிறுவனங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

பொதுச் செயலாளருக்கான அறிவிப்பு

குறித்த கடிதத்தில் மேலும், இனிவரும் காலங்களில் ஊடகங்களின் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு ஐ.தே.க. அரசியல்வாதிகளை அழைப்பதாயின் கட்சியின் பொதுச் செயலாளருக்கு அது குறித்து அறிவிக்க வேண்டும்.

அவ்வாறின்றி பொதுச் செயலாளரின் அனுமதியின்றி ஊடக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அரசியல் பிரமுகர்கள் வெளியிடும் கருத்துக்கள் குறித்து கட்சி எந்தவொரு பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாது என்றும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version