Home இலங்கை சமூகம் நிலவும் சீரற்ற காலநிலை.! நுவரெலியாவில்193 குடும்பங்களுக்கு பாதிப்பு!

நிலவும் சீரற்ற காலநிலை.! நுவரெலியாவில்193 குடும்பங்களுக்கு பாதிப்பு!

0

நாட்டில் பெய்துவரும் பலத்த மழையினால் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,  நுவரெலியாவிலும் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று (26.11.2024) பிற்பகல்
வரை 193 குடும்பங்களைச் சேர்ந்த 691 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா (Nuwara Eliya) மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை

சீரற்ற காலநிலை காரணமாக 98 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 50
குடும்பங்களைச் சேர்ந்த 207 பேர் 3 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர்
மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சீரற்ற காலநிலையால் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், நேற்று வெள்ளம் காரணமாக தடைப்பட்ட கந்தபளை வீதியில் பரீட்சைக்கு வந்த மாணவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய
நிலையம் உள்ளிட்ட அதிகாரிகள் செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/unstable-weather-prevailing-in-nuwara-eliya-1732685718

NO COMMENTS

Exit mobile version