Home இலங்கை சமூகம் அரசாங்க கொடுப்பனவுகள் பெறுவோருக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

அரசாங்க கொடுப்பனவுகள் பெறுவோருக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

0

நலன்புரி கொடுப்பனவுகளை பெற தகுதியான பயனாளிகளின் பட்டியலைப் புதுப்பிக்க நலன்புரி நன்மைகள் சபை முடிவு செய்துள்ளது.

அதன்படி, 2023 ஆம் ஆண்டில் அரசு நலன்புரி கொடுப்பனவுகளை எதிர்பார்த்து சமூகப் பாதுகாப்பு தகவல் பதிவேட்டில் பதிவுசெய்து தகவல்களை வழங்கிய அனைத்து நபர்களின் தகவல்களையும் புதுப்பிப்பது 10 ஆம் திகதி முதல் தொடங்கும் என்று சபை அறிவித்துள்ளது.

 

தகவல் புதுப்பிப்பு

இதேவேளை, அடுத்த ஆண்டு நலன்புரி கொடுப்பனவுகளை பெறக் காத்திருக்கும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீண்டும் தங்கள் தகவல்களைப் புதுப்பிப்பது கட்டாயமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, அவர்கள் wbb.gov.lkஎன்ற நலன்புரி நன்மைகள் சபையின் இணையத்தளத்தை பார்வையிடமுடியும்.

அத்தோடு, விண்ணப்பப் படிவங்களை நிரப்பி பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கவும் முடியும். 

NO COMMENTS

Exit mobile version