Home இலங்கை சமூகம் இலங்கையில் இருளில் மூழ்கியுள்ள பல பகுதிகள் – மின்சார சபையின் அவசர அறிவிப்பு

இலங்கையில் இருளில் மூழ்கியுள்ள பல பகுதிகள் – மின்சார சபையின் அவசர அறிவிப்பு

0

மோசமான வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.

வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை (CEB) மேலும் கூறுகையில், மோசமான வானிலை காரணமாக நாடு முழுவதும் நாற்பத்தைந்தாயிரம் மின் தடைகள் பதிவாகியுள்ளன.

1987 SMS சேவைகள்

நேற்று 27 ஆம் திகதி மாலைக்குள், இந்த மின் தடைகளில் சுமார் இருபதாயிரம் மின் தடைகள் மீட்டெடுக்கப்பட்டதாக சபை சுட்டிக்காட்டுகின்றது.

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மின் தடைகளை மீட்டெடுக்க விரைவாக செயல்பட்டு வருவதாகவும்,நிலவும் மோசமான வானிலை காரணமாக மின் தடைகள் குறித்து அழைப்பு மையத்திற்கு வரும் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எனவே, Ceb care மொபைல் பயன்பாடு, Cebcare வலைத்தளம் மற்றும் 1987 SMS சேவைகளைப் பயன்படுத்துமாறு மின்சார சபை பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றது.

NO COMMENTS

Exit mobile version