Home இலங்கை சமூகம் இலங்கைக்கு அதிரடியாக வந்திறங்கிய அமெரிக்க விமானப்படையினர்..

இலங்கைக்கு அதிரடியாக வந்திறங்கிய அமெரிக்க விமானப்படையினர்..

0

டித்வா புயல் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகளுக்காக இலங்கை்கு அமெரிக்க விமானங்கள் வந்திறங்கியுள்ளன.

அமெரிக்க வான் போக்குவரத்துத் திறன்களை வழங்குவதற்காக, இரண்டு C-130J Super Hercules விமானங்களும் அமெரிக்க விமானப்படையின் 36ஆவது எதிர்பாராத அவசரநிலைகளுக்கான பதிலளிப்புக் குழுவினைச் (CRG) சேர்ந்த விமானப் படை வீரர்களும் இன்று கட்டுநாயக்க விமானத்தளத்தினை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்களின் நிவாரணப் பணி

அமெரிக்க தூதரகம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த குழுவினர் வருகை தந்தபோது அவர்களை அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் மற்றும் இலங்கையின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கே.பி. அருன ஜயசேகர ஆகியோர் வரவேற்றனர்.

அமெரிக்க அலுவலர்களும் அவர்களின் இலங்கை சகாக்களும் உடனடியாக பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அத்தியாவசியமான நிவாரணப் பொருள் விநியோகங்களைஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

குவாமிலிருந்து செயற்படும் 36ஆவது CRG மற்றும் ஏனைய பிரிவுகளைச் சேர்ந்த அமெரிக்க விமானப்படை வீரர்கள், இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு உடனடி போக்குவரத்து மற்றும் ஏற்பாட்டியல் உதவிகளை வழங்குவார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version