Home உலகம் 245 சதவீத வரி விதித்த ட்ரம்ப்….! ஆட்டம் காணும் சீனா

245 சதவீத வரி விதித்த ட்ரம்ப்….! ஆட்டம் காணும் சீனா

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald trump) விதித்த வரிகளால் சீன சிறு வணிகங்கள் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவிற்குள் (USA) நுழையும் அனைத்து சீனப் பொருட்களுக்கும் 145 சதவீத வரியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்ததால் இந்த நெருக்கடி ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று இதுவரை 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்கா (United States) அறிவித்துள்ளது.

கடுமையான அழுத்தம்

இந்நிலையில், அமெரிக்காவிற்கு அனுப்பப்படவிருந்த பல பொருட்கள் இன்னும் சீனாவில் உள்ள கிடங்குகளில் இருப்பதாக சிறு வணிக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் நோக்கத்துடன் தயாரிக்கப்படும் பல பொருட்கள் தற்போது உற்பத்தி செய்யப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டு ஊடகத் தரவுகளின்படி, 30,000க்கும் மேற்பட்ட வணிகங்களின் உரிமையாளர்கள் இந்தக் வரிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விண்ணை முட்டும் அளவு

இந்த வரிகள் சீனாவை மட்டுமல்ல, அமெரிக்கர்களையும் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதற்குக் காரணம், சில சீனப் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவதே ஆகும்.

பெரும்பாலான அமெரிக்கர்கள் சீனப் பொருட்களைக் கொண்டு தங்கள் சமையலறைத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர், மேலும் விலை உயர்வால் அவர்களின் வழக்கமான வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

உலகின் தொழிற்சாலை என்று அழைக்கப்படும் சீனாவில், அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் பொருட்களின் உற்பத்தியில் மட்டும் 10 முதல் 20 மில்லியன் மக்கள் ஈடுபட்டுள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

NO COMMENTS

Exit mobile version