Home உலகம் கனடாவுக்கு தலைவலியான ட்ரம்பின் மற்றுமொரு அதிரடி முடிவு!

கனடாவுக்கு தலைவலியான ட்ரம்பின் மற்றுமொரு அதிரடி முடிவு!

0

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதன் ஒரு முக்கிய நடவடிக்கையாக அமெரிக்காவில் சட்டவிரோதாக குடியேறிய லட்சக்கணக்கான மக்கள், தங்கள் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.

கனடாவில் கைதுகள்

இந்த நிலையில், அதில் இருந்து தப்பிக்க சிலர் கனடாவுக்குள் (Canada) நுழைய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களில் மட்டும் அமெரிக்க எல்லையில் இருந்து கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன்போது, கனடாவின் கடுங்குளிரைத் தாங்குவதற்கான சரியான ஆடைகள் கூட இல்லாமல் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

எவ்வாறாயினும், கைது செய்யப்பட்டவர்கள் குறித்த தனிநபர் தகவல்களை வெளியிட முடியாது என்று கனடா தெரிவித்துள்ளது.

இவ்வாறனதொரு பின்னணியில், அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேரிகள் கனடாவுக்குள் நுழையலாம் என்பதால் அதிகாரிகள் எல்லைகளில் பாதுகாப்பு பணியை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version