Home உலகம் வாகன தரிப்பிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம் : ஐந்து பேர் படுகாயம் (காணொளி)

வாகன தரிப்பிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம் : ஐந்து பேர் படுகாயம் (காணொளி)

0

அமெரிக்காவில் (United States) சிறிய ரக விமானம் ஒன்று வாகன நிறுத்துமிடத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த விமான விபத்து நேற்றைய தினம் (09.03.2025) இடம்பெற்றுள்ளது. விமான விபத்தைத் தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இயங்கி வரும் முதியோர் இல்லத்துக்கு முன்பிருந்த வாகன நிறுத்துமிடத்தில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.

ஐந்து பேர் படுகாயம் 

இந்த விமான விபத்தில் சிக்கி ஐந்து பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விமானம் தீப்பிடித்ததையடுத்து வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட கார்கள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த சிறிய ரக விமானம் விபத்தில் சிக்க என்ன காரணம் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகத நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

https://www.youtube.com/embed/3-nGe0dq9xo

NO COMMENTS

Exit mobile version