இலங்கை மற்றும் அமெரிக்க கடற்படைகளுக்கு இடையிலான 6ஆவது காராட் (CARAT Sri Lanka 2026) கூட்டுப் பயிற்சி திருகோணமலை மற்றும் கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு, அவசர கால மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் மேலாண்மைத் திறன்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயிற்சி முன்னெடுக்கப்படுகிறது.
இதில் அமெரிக்க கடற்படையின் அதிநவீன P-8A போஸைடான் கடல்சார் ரோந்து விமானம் மற்றும் SLNS கஜபாகு கப்பல் ஆகியவை விசேட கண்காணிப்பு மற்றும் கூட்டுப் பயிற்சிகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும், இரு நாட்டுப் படைகளும் இணைந்து கடல்சார் கண்காணிப்பு, குண்டு வெடிப்புச் செயலிழப்பு மற்றும் சந்தேகத்திற்குரிய கப்பல்களைச் சோதனையிடும் (VBSS) பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன.
2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த கூட்டுப் பயிற்சி, வாஷிங்டன் மற்றும் கொழும்பு இடையிலான நீண்டகால பாதுகாப்புப் பங்களிப்பையும் இருதரப்பு உறவையும் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
Source: https://tamilwin.com/article/us-spy-plane-p8a-poseidon-sri-lanka-1785173865
