Home இலங்கை எலோன் மஸ்க்கினால் நிறுத்தப்பட்ட இலங்கைக்கான இரண்டு யுஎஸ்எய்ட் திட்டங்கள்

எலோன் மஸ்க்கினால் நிறுத்தப்பட்ட இலங்கைக்கான இரண்டு யுஎஸ்எய்ட் திட்டங்கள்

0

அமெரிக்க கோடீஸ்வர தொழிலதிபர் எலோன் மஸ்க்கின் அரசாங்க செயல்திறன் துறை,
இலங்கையில் ஒரு காலநிலை தகவலமைப்பு திட்டம் உட்பட, வீணானது என்று கருதப்பட்ட பல
யுஎஸ்எய்ட் நிதியளிப்புத் திட்டங்களை நிறுத்தியுள்ளது.

எக்ஸ் பதிவில் வெளியிடப்பட்ட தகவல்படி, ரத்துச்செய்யப்பட்ட 199 திட்டங்களில்
இலங்கைக்கான இரண்டு திட்டங்களையும் அந்தத் துறை பெயரிட்டுள்ளது.

இலங்கை காலநிலை மாற்றத் தணிப்பு தகவமைப்பு மற்றும் வன சேவைக்கான மீள்தன்மை
ஒருங்கிணைப்பாளர் சேவைகள் என்பனவே அவையாகும்.

திட்டங்கள் இரத்து

இலங்கைக்கான இரண்டு திட்டங்கள் உட்பட்ட 199 திட்டங்களை இரத்துச்செய்ததன் மூலம்
250 மில்லியன் டொலர்கள் மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாக மஸ்க் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version