Home இலங்கை சமூகம் சிறிலங்கா எயார்லைன்ஸின் புதிய விமானத்திற்கு மாதம் செலுத்த வேண்டிய தொகை இதுதான்.!

சிறிலங்கா எயார்லைன்ஸின் புதிய விமானத்திற்கு மாதம் செலுத்த வேண்டிய தொகை இதுதான்.!

0

பிரான்சிலிருந்து சிறிலங்கா எயார்லைன்ஸ் குத்தகைக்கு எடுத்த புதிய எயார்பஸுக்கு மாதந்தோறும் 275,000 அமெரிக்க டொலர் கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க (இன்று(05) நாடாளுமன்றில் குறிப்பிட்டார்

அத்தோடு, எயார்பஸ் மூலம் கிடைக்கும் வருவாயுடன் ஒப்பிடும்போது இது பெரிய தொகை அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ராஜபக்ச – ரணில் மோசடி

ராஜபக்ச ஆட்சியின் எயார்பஸ் ஒப்பந்தத்தின் காரணமாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் இன்னும் மாதந்தோறும் 800,000 அமெரிக்க டொலர்களை செலுத்துகிறது என்றும், அதே நேரத்தில் இந்த ஒப்பந்தத்தில் சிறிலங்கன் எயார்லைன்ஸ் எந்த எயார்பஸையும் பெறவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

எயார்பஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்வதன் மூலம் ராஜபக்ச அரசாங்கம் மில்லியன் கணக்கான டொலர்களை மோசடி செய்ததாகவும், மறுபுறம் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் ஒப்பந்தத்தை ரத்து செய்வதன் மூலம் மோசடி செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.   


you may like this


https://www.youtube.com/embed/XPoRtXsqYo0

NO COMMENTS

Exit mobile version