முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வாலி படம் ஜோதிகாவின் முதல் படம் கிடையாதா?- முதலில் நடித்த படம் குறித்து நடிகையே கொடுத்த பேட்டி

நடிகை ஜோதிகா

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் ஜோதிகா.

துறு துறு நடிப்பு, பப்லியான உருவம் என தமிழ் ரசிகர்கள் ரசிக்க வைத்தவர் முதலில் திரையில் தோன்றியது எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி படத்தில் தான்.

சிம்ரன் படத்தின் முக்கிய நாயகி என்றாலும் சோனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் முதல் படத்தின் மூலமே பதிந்துவிட்டார்.

விஜய்யின் 69வது படத்தின் இயக்குனர் உறுதியானாரா?- அட இவர்தானா?

விஜய்யின் 69வது படத்தின் இயக்குனர் உறுதியானாரா?- அட இவர்தானா?

அதன்பிறகு ஜோதிகாவின் திரைப்பயணம் வெற்றிகரமாக அமைய நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டு ஒரு மகள் மற்றும் மகன் பெற்று சினிமா பக்கம் வராமல் இருந்தார்.

இப்போது குழந்தைகள் வளர்ந்துவிட மிகவும் நல்ல கதைக்களம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அண்மையில் அஜய் தேவ்கனுடன், ஜோதிகா நடித்த ஹிந்தி படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

வாலி படம் ஜோதிகாவின் முதல் படம் கிடையாதா?- முதலில் நடித்த படம் குறித்து நடிகையே கொடுத்த பேட்டி | Vaali Is Not Jyothika First Movie

முதல் படம்

சமீபத்தில் ஜோதிகா ஒரு பேட்டியில் பேசும்போது, ப்ரியதர்ஷன் இயக்கிய டோலி சஜாகே ரக்னா என்ற ஹிந்தி படத்தில் கடந்த 1998ம் ஆண்டு நடித்தேன்.

அந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது, அந்த சமயத்தில் இயக்குனர் வசந்த் வந்து என்னை சூர்யாவின் ஜோடியாக நடிக்க கமிட் செய்தார். நான் முதலில் கமிட்டான படம் பூவெல்லாம் கேட்டுப்பார் தான், ஆனால் வாலி திரைப்படம் முதலில் ரிலீஸாகிவிட்டது.

அப்போது எனக்கு 17 வயதுதான் என கூறியிருக்கிறார்.

வாலி படம் ஜோதிகாவின் முதல் படம் கிடையாதா?- முதலில் நடித்த படம் குறித்து நடிகையே கொடுத்த பேட்டி | Vaali Is Not Jyothika First Movie

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்