Home சினிமா 6 நாட்களில் வாழை திரைப்படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

6 நாட்களில் வாழை திரைப்படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

வாழை

எதார்த்தமான கதைக்களத்தில், உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் வாழை.

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான வாழை திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளில் இருந்த விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வாழை பட்டையை கிளப்பி வருகிறது.

வசூல் விவரம்

இந்த நிலையில், வாழை திரைப்படம் வெளிவந்து 6 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 15 கோடி வரை வசூல் செய்துள்ளது.

மாரி செல்வராஜின் அடுத்த படைப்புகள்

வாழை திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் பைசன். இப்படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க, அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயினாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு பின் தனுஷுடன் மாரி செல்வராஜ் இணைவார் என கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஏற்கனவே கர்ணன் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://cineulagam.com/article/vaazhai-movie-6-days-box-office-collection-1724900782

NO COMMENTS

Exit mobile version