யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாணவியொருவர் கொழும்பில் உள்ள
பாடசாலையில் கல்வி கற்று வரும் நிலையில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சிறப்பு சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.
கொழும்பு நல்லாயன் மகளிர் மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சதுர்திகா
வள்ளிக்காந்தன் என்ற மாணவியே வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை
பெறுபேற்றில் 9ஏ சித்திகளைப் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
அந்தவகையில் அவர் பெற்றுக்கொண்ட பெறுபேறுகள்,
-
சைவநெறி – ஏ
- தமிழ் – ஏ
- ஆங்கிலம் – ஏ
- கணிதம் – ஏ
- வரலாறு – ஏ
- விஞ்ஞானம் – ஏ
- நடனம் – ஏ
- வணிகக்கல்வி – ஏ
- தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் – ஏ
