வள்ளியின் வேலன்
ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று வள்ளியின் வேலன்.
இந்த தொடரில் திருமணத்திற்கு பின் ஒன்றாக இணைந்து சித்து-ஸ்ரேயா ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்கள். நாளுக்கு நாள் கதைக்களத்தில் விறுவிறுப்பு அதிகமாக கதைக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.
முக்கிய தகவல்
இந்த தொடரின் இயக்குனர் பிரதாப், நட்சத்திரங்களிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. நாயகன்-நாயகி தாண்டி மற்ற அனைவருடனும் மரியாதையின்றி ஒருமையில் பேசுகிறார், காரணமின்றி திட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தனது மனைவியின் பிறந்தநாளுக்கு சூப்பர் பரிசு கொடுத்த சீரியல் நடிகர் கார்த்தி.. கியூட் வீடியோ
தற்போது ஒரு நடிகையுடன் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட சர்ச்சை விவகாரம் சேனல் நிர்வாகத்திடம் செல்ல, அதிர்ச்சியடைந்த நிர்வாகம் இயக்குனரை வள்ளியின் வேலன் தொடரில் இருந்து நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தொடரின் புதிய இயக்குனராக ஜீவா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளாராம்.