நேற்றையதினம் (14.11.2024) இடம்பெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள துரைராசா ரவிகரனுக்கு (T. Raviharan) முல்லைத்தீவு மக்களால் அமோக வரவேற்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்றையதினம் (15.11.2024) முல்லைத்தீவு (Mullaitivu) நகரில் இடம்பெற்றுள்ளது.
முள்ளிவாய்க்கால்
காலை 11.15 மணியளவில் இறுதிப்போரில் உயிரிழந்த மக்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு சென்று வணக்கம் செலுத்தியிருந்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு வன்னி தேர்தல் மாவட்டத்தில் துறைராசா ரவிகரன்,11,215 வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வரவேற்பு நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மக்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.