Home சினிமா திருமணத்திற்கு பிறகும் நடிப்பேனா.. வரலக்ஷ்மி மறைமுகமாக கொடுத்த பதில்

திருமணத்திற்கு பிறகும் நடிப்பேனா.. வரலக்ஷ்மி மறைமுகமாக கொடுத்த பதில்

0

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் அவரது காதலர் நிக்கோலை என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். மெஹந்தி சங்கீத், ரிசப்ஷன் ஆகிய நிகழ்ச்சிகள் சென்னை நட்சத்திர ஹோட்டலில் நடந்த நிலையில் திருமணம் தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது.

திருமணத்தில் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அதன் புகைப்படங்களும் வைரல் ஆகி இருந்தது.

திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன்

இந்நிலையில் இன்று வரலக்ஷ்மி கணவர் உடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் திருமணத்திற்கு பிறகும் நடிப்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது.

‘என் காதல் இவர் என்றால், என் உயிர் சினிமா தான்.. திருமணத்திற்கு பிறகும் நடிப்பேனா என கேட்பவர்களுக்கு பதில் கிடைத்திருக்கும்” என வரலக்ஷ்மி கூறி இருக்கிறார். 

Source: https://cineulagam.com/article/varalaxmi-sarathkumar-on-acting-after-marriage-1721060368

NO COMMENTS

Exit mobile version